மின்னழுத்தியை பயன்படுத்தி தனது 27 வயதான மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த குற்றச்சாட்டில் குறித்த பெண்ணின் 34 வயதான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம், கண்டி, ஹத்தரலியத்த பொல்வத்த பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
தனது மனைவியின் தகாத உறவு குறித்து அறிந்து கொண்ட கணவன், மின்னழுத்தியால் மனைவியின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
படுகாயங்களுக்கு உள்ளான குறித்த பெண் பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட கணவன், கலகெதர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் மே மாதம் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
