வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மொழி ஆசிரியர்கள் மேலதிகமாக காணப்படுகின்றனர்.
ஆனால் மேல் மாகாணம் உட்பட ஏனைய மாகாண தமிழ் மொழி பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்டபடுகின்றன. இந்த ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ள பிரதேசங்களுக்கு ஆசிரியர்களை நியமிப்பதற்கு அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் புதிய பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னர் 26,000 புதிய பட்டதாரிகளையும் 8,000 கல்வியற் கல்லூரி ஆசிரியர்களையும் ஆசிரிய சேவையில்இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளது.
அண்மையில், 12,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், பாடசாலைகளில் ஆசிரியர் வெற்றிடங்கள் நிழவுகின்றன. தேசிய பாடசாலைகளுக்கு 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மீதமுள்ள 22,000 பேர் மாகாணப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.
அரசாங்க சேவையில் பணிபுரியும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்காதன விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. இருந்தபோதிலும் விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் மேலும் ஒரு வாரத்தால் நீடிக்கப்பட்டுளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அதற்கான அவகாசம் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
