கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம், திம்பிரிகஸ்கடவல, ஷ்ரவஸ்திபுராவில் உள்ள ஒரு கோவிலில் புதையல் தோண்டுவதற்கு முட்பட்ட தாக கூறி அவரது மனைவி மற்றும் ஏழு பேர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனை அடுத்து தாம் பிரதி பொலிஸ் மா அதிபர் என்றும், தமது மனைவியை உடனடியாக விடுவிக்குமாறும் அநுராதபுரம் பொலிஸாருக்கு சந்தேநபர் தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில், இன்றைய தினம் சந்தேகநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
