ஹட்டன், மஸ்கெலியா, நோர்வூட், கொட்டகலை, பிரதேசங்களில் கடந்த தீபாவளி பண்டிகை காலங்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனைகளை நடத்தியிருந்தனர்.
இதன் போது உணவு சட்டத்தை மீறிய உணவை கையாளும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று 12/11/2025 ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இதன் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கடதாசிகளில் உணவை வழங்குதல், காலாவதியான உணவு விற்பனை, மனித பாவனைக்கு பொருத்தமில்லாத உணவு விற்பனை, அசுத்தமான ஹோட்டல்களின் சமையலறை, போன்ற பல குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்டது.
ஏற்கனவே குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத உணவகங்கள் ஒரு வாரத்துக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என ஹட்டன் மாவட்ட நீதிபதி கடுமையாக எச்சரித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் மஸ்கெலியா பகுதியில் பிறந்தநாள் கேக் ஒன்றை வெட்டும் போது கேக்கின் நடுவே இறந்த பல்லி ஒன்று இருந்ததாக சுகாதார அதிகாரிகள் ஹட்டனில் வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
