காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம்.
காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது. இந்த செயல் காவத்தை சம்பவம் மிலேட்சத்தனமானது என்று கூறினார் முன்னாள் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ பழனி திகாம்பரம்.
காவத்தை நீலகாமம் தோட்டம் இலக்கம் ஒன்று பிரிவில் பெருந்தோட்ட மலையக குடியிருப்பொன்றினை காடையர் மர்ம கும்பல் சென்று தாக்கி உடைத்துள்ளது. இந்த செயல் மிலேட்சத்தனமானது. இதனை வன்மையாக கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நியாயம் கிடைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது முதல் முறையல்ல.இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகவே இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்றன. சம்பவம் நடக்கின்றபோது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதும் வழமை. முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதுடன் இனி இத்தகைய செயல்கள் இடம்பெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தோட்ட நிருவாகங்கள் இத்தகைய மிலேட்சத்தனமான செயலை நிறுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
