எரிபொருள் விலைத் திருத்தங்களை லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எரிபொருள் விலையில் மாற்றம்: ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களின் முக்கிய அறிவிப்பு!
அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய, 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கமைய மாற்றியமைப்பதாக லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
எனினும், ஏனைய எரிபொருட்களின் விலைகளை எந்தவித மாற்றமுமின்றி, பழைய முறைப்படியே பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன
