Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

July 10, 2026

தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

July 10, 2026

அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

July 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>
Breaking

பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>

ThanaBy ThanaMay 16, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பெருந்தோட்டங்களில் இடம்பெறும் -தாக்குதல்கள் தொடர்பில்  பல்தரப்பு மாநாடு-தமுகூ தலைவ‌ர் மனோ விடம் அமைச்சர் விஜயபால இணக்கம்>

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல தரப்புகளையும் அழைத்து
அவசர மாநாட்டை கூட்டுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பாராளுமன்றத்திலும், அதை தொடர்ந்து, கடிதம் மூலமும், நேற்று நேரடியாக தொலைபேசி மூலமும் விடுத்த கோரிக்கையை ஏற்று கொண்ட பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, புதன் கிழமை பாராளுமன்ற வளாகத்தில் இந்த மாநாட்டை கூட்டுவதாக மனோ எம்பியிடம் உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பில் தமுகூ தலைவ‌ர் மனோ கணேசன், பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு பின்வரும் கடிதத்தை அனுப்பியுள்ளார். அதை தொடர்ந்து தொலைபேசியிலும் உரையாடி உள்ளார். இதை தொடர்ந்து இந்த முடிவை அமைச்சர், மனோ எம்பியிடம் நேரடியாக தெ‌ரி‌வி‌த்து‌ உள்ளா‌ர்.

கௌரவ ஆனந்த விஜேபால, எம்.பி.
பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

அன்புள்ள அமைச்சரே,

விடயம்:
தோட்ட பகுதி மக்கள்மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள பல்துறை அவசர மாநாட்டை கூட்டுதல்

கடந்த வாரம், நாடாளுமன்றத்தில், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சமீபத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களை குறித்து, நான் உரையாடி உங்கள் அவதானததை கோரி இருந்தேன். என்னுடன்
நான் கௌரவ தொண்டமான் எம்.பி. மற்றும் கௌரவ எதிர்க்கட்சித் தலைவரும் இவை குறித்து கூறி இருந்தனர்.

மேலும், சனிக்கிழமை இரவு, தொலைபேசி உரையாடலின் போது, இச்சம்பவங்கள் குறித்து மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அறிவித்ததுடன், நிலைமை தொடர்பான எங்களது கடுமையான கவலைகளையும் எடுத்துரைத்தேன்.

மேலும், நாடாளுமன்றத்தில் இருந்து உங்களிடம் வாய்மொழியாக, பின்வரும் தரப்புகளை உள்ளடக்கிய மாநாட்டை கூட்டுமாறு கேட்டுக்கொண்டேன்:

1)கௌரவ கே.வி. சமந்த வித்யாரத்ன, தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்
2)காவல்துறை மா அதிபர் (IGP)
3)மத்திய, ஊவா, சபரகமுவ, தென், மேல் மற்றும் வடமேல் மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி காவல்துறை மா அதிபர்கள் (DIGs)
4)அனைத்து 22 பிராந்திய தோட்டக் கம்பனிகளின் (RPCs) பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (CEOs)

கௌரவ சபாநாயகரின் இணக்கப்பாட்டுடன், இம்மாநாட்டை விரைவாக கூட்டுவதற்கு நீங்கள் சம்மதித்தீர்கள்.

நேற்று, உடபுசல்லாவ காவல் பிரிவிற்குள் மேலும் ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது. அங்கு ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரத்தின் அவசர தன்மையையும், அதிகரித்து வரும் வன்முறையையும், கருத்தில் கொண்டு, நீங்கள் வாக்குறுதியளித்த மாநாட்டை தாமதமின்றி கூட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் மூன்று எம்.பிக்களுடன் சேர்ந்து நானும், மேலும் ஐந்து சிவில் செயற்பாட்டாளர்களும், இந்த மாநாட்டில் பங்கேற்று, மீண்டும் மீண்டும் இடம்பெறும் இந்த வன்முறைச் சம்பவங்களுக்கு அமைதியான தீர்வை உருவாக்க விரும்புகிறோம்.

உண்மையுடன்,
மனோ கணேசன், எம்.பி.
தலைவர் – தமிழ் முற்போக்கு கூட்டணி
15 மே 2026 – கொழும்பு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    “Ceylon Tea Village” (கொத்தணி தேயிலை கிராமங்கள்) 500 உருவாக்கும் வேலைத்திட்டம் 15 ஆம் திகதி ஆரம்பம்

    July 10, 2026

    கதிர்காம பாதயாத்திரிகர்களுக்காக இன்று முதல் குமண நுழைவாயில் திறப்பு!

    July 10, 2026
    Editors Picks

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026

    புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

    July 10, 2026

    மலையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மற்றும் ராதாகிருஷ்ணன் MP ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு

    July 10, 2026

    தெற்காசியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

    July 10, 2026

    அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

    July 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.