Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!
இலங்கை

கல்கிஸ்ஸவில் சட்டவிரோத தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை: மாலைத்தீவு நபர் கைது!

ThanaBy ThanaMay 20, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சட்டவிரோதமான முறையில் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்தி நடாத்திச் செல்லப்பட்ட தொலைக்காட்சி ஔிபரப்பு நிலையம் ஒன்றை கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளதுடன், வெளிநாட்டு சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அத்திடிய வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் இந்த ஔிபரப்பு நிலையம் நடத்தப்பட்டு வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனை பிடியாணையின்படி நேற்று (19) இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த கூட்டு முற்றுகையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட அலைபரப்பு உபகரணங்களுடன், இந்த சட்டவிரோத நிலையத்தை நடத்திச் சென்ற வெளிநாட்டு நபர் கைது செய்யப்பட்டு கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுபோவில பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய மாலைத்தீவு நாட்டைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

இங்கு தோராயமாக ஒரு கோடி ரூபாய் பெறுமதியான தொடர்பாடல் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸ பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.