நாவலப்பிட்டியில் முச்சக்கர வண்டி மீது மரம் முறிந்து வீழ்ந்து மூவர் உயிரிழப்பு!
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில், கலபொட தோட்டத்தை சேர்ந்த பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (04) காலை இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவனும் பெண்கள் இருவரும் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.
