Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது.

June 26, 2026

தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை பொறுப்பதிகாரி கைது!

June 26, 2026

மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 

June 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது!
Breaking

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது!

ThanaBy ThanaJune 26, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது!

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவரின் பிரதான துப்பாக்கிதாரியாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் “மாட்டியா” எனப்படும் போம்புவல தேவகே சுரங்க சஞ்சீவ கருணாரத்ன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசியாவில் தங்கியிருந்த போது அந்நாட்டுப் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதையடுத்து நேற்று (25) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

42 வயதான இந்த சந்தேகநபர் கொட்டுகொட, யாகொடமுல்ல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன், இவரைக் கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரால் (Interpol) சிவப்பு அறிவித்தலும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி கம்பஹா நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து, ‘பஸ்பொட்டா’ எனப்படும் பாதாள உலகக் குழு உறுப்பினரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் சுட்டுக் கொலை செய்தமை மற்றும் அங்கு நின்றிருந்த மேலும் பலரைச் சுட்டுக் காயப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுகளாகும்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது.

    June 26, 2026

    தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை பொறுப்பதிகாரி கைது!

    June 26, 2026

    மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 

    June 26, 2026

    பெண் இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு.

    June 25, 2026
    Editors Picks

    பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது.

    June 26, 2026

    தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை பொறுப்பதிகாரி கைது!

    June 26, 2026

    மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 

    June 26, 2026

    மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலக துப்பாக்கிதாரி ‘மாட்டியா’ கட்டுநாயக்கவில் கைது!

    June 26, 2026

    பெருந்தோட்டத்துறையயினை டிஜிட்டல் மயமாக்குதல் “Plantation Sector DSS” உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யபட்டது.

    June 26, 2026

    தெல்தெனிய பெண் இயன்முறை சிகிச்சை நிபுணர் மரணம்: குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் பாடசாலை பொறுப்பதிகாரி கைது!

    June 26, 2026

    மாத்தறை – தலல்ல வீதியில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து 

    June 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.