இலங்கையின் பாரம்பரிய விவசாயப் பயிர்களான தேயிலை, தென்னை மற்றும் ரப்பர் ஆகியவற்றுக்கு மாற்றாக, அதிக வருமானம் தரக்கூடிய மாற்றுப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதில் *Golden Agro Ventures (Pvt) Ltd* நிறுவனம் முனைப்புடன் செயற்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான *சண்முகநாதன் பிரபாகரன்* அவர்களின் வழிகாட்டலில், இலங்கை விவசாயப் பொருளாதாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
*வெனிலா சாகுபடியில் புதிய மைல்கல்:*
தற்போது இலங்கையில் போதியளவு முன்னெடுக்கப்படாத, அதேவேளை உலக சந்தையில் மிகுந்த பெறுமதி வாய்ந்த *வெனிலா (Vanilla)* உற்பத்தியை வணிக ரீதியாக முன்னெடுப்பதில் இந்நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. பாரம்பரிய பயிர்களை விட அதிக வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய இந்த வெனிலா சாகுபடியை, இலங்கையின் விவசாய நிலங்களில் அறிமுகப்படுத்துவதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும்.
தமது நிறுவனத்தின் இந்த வளர்ச்சிப் பாதையை கொண்டாடும் வகையிலும், எதிர்காலத் திட்டங்களை விவரிக்கும் வகையிலும், நிறுவனத்தின் *’ஆண்டு விழா 2026′ (Annual Day 2026)* ஜூன் 28 ஆம் திகதி கொழும்பு சாங்க்ரி-லா ஹோட்டலில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.இந்த நிறுவனத்தில் இணைந்து சேவையாற்றும் பணியாளர்களுக்கான கௌரவிப்பும் ,பெறுமதி மிக்க பரிசில்களும் இதன் போது வழங்கப்பட்டன.
இதவேளை நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் சினிமாவின் இசையமைப்பாளர் யுவன் சங்கராஜா கலந்துகொண்டதோடு ,சர்வஜன சக்தியின் தலைவர் திலீப் ஜயவீரவும் கலந்து சிறப்பித்தனர்.
விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பங்களையும், வாழ்வாதாரத்தை உயர்த்தும் பயிர்ச்செய்கை முறைகளையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கை விவசாயிகளுக்கு ஒரு பொற்காலத்தை உருவாக்க *Golden Agro Ventures* அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
