2026 உலகக் கிண்ண
கால்பந்து தொடரிலிருந்து
வெளியேறிய பிரேசில்
– வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த நோர்வே
உலகக் கிண்ண 2026 கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்று நடைபெற்ற ‘ரவுண்ட் ஆஃப் 16’ (Round of 16) தகுதிச் சுற்றுப் போட்டியில், பலம் வாய்ந்த பிரேசில் அணியை 2 – 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நோர்வே அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் நோர்வே அணி முதன்முறையாக உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.
உலகக் கிண்ண வரலாற்றில் பிரேசில் போன்ற ஒரு முன்னணி அணி இவ்வளவு சீக்கிரமாக வெளியேறியுள்ளது அதன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

