லாகூரில் நடைபெற்ற மும்முனை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5ஆவது போட்டியில், பாகிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் பந்துவீசிய இலங்கை அணி, பாகிஸ்தானை 25 தசம் 3 ஓவர்களில் 110 ஓட்டங்களுக்குள் சுருட்டியது.
இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தில்ஷான் மதுஷங்க 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் வீழ்த்தி அசத்தினார்.
தொடர்ந்து 111 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி, 18 தசம் ஒரு ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.
துடுப்பாட்டத்தில் கலக்கிய கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.
191 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலங்கை அணி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், பாகிஸ்தான் அணி ஏற்கனவே தொடரின் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
