17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டி – தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு அபார வெற்றி.
17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வன்பந்து கிரிக்கெட் போட்டியில் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கும் பரிசுத்த திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான இப்போட்டி ரதெல்ல மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலய அணி 108 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் 109 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிக் களமிறங்கிய பரிசுத்த திரித்துவக் கல்லூரி அணி 28 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து.
இதன் மூலம் தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் 80 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியின் சிறந்த பந்துவீச்சாளராக தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் ரவிச்சந்திரன் அரிசான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.














