Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

October 13, 2026

சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

October 13, 2026

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

October 12, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு: நபர் உயிரிழப்பு; கார் மீட்பு!
இலங்கை

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச் சூடு: நபர் உயிரிழப்பு; கார் மீட்பு!

ThanaBy ThanaJuly 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்த பகுதியில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபரொருவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (23) இரவு 9:45 மணியளவில் எலக்கட வீதியில் அமைந்துள்ள ‘Villa by the edge’ விழா மண்டபத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் ‘குடு ரொஷான்’ எனப்படும் துப்பஹி ஆரச்சிகே பிரசாத் ருவானின் உதவியாளரான (சீடன்) வநாத முல்லே சுமேதா (39 வயது) என அறியப்படும் எச். மகேஷ் மதுசங்க என்பவராவார்.

துப்பஹி ஆரச்சிகே ரந்தவ் (45 வயது) என்பவரது மகளின் பிறந்தநாள் விழாவிலேயே இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இவர் ‘குடு ரொஷான்’ என்பவரின் சகோதரராவார்.

பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டிருந்த ‘குடு ரொஷான்’ என்பவரை இலக்கு வைத்தே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கருப்பு நிற காரில் வந்த இனந்தெரியாத நபர்களே இத்தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். தாக்குதலுக்கு பிஸ்டல் (Pistol) ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே, சந்தேகநபர்கள் தப்பிச் செல்லப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கருப்பு நிற கார், ஜா-எல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இக்காரை ஜா-எல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை மற்றும் ஜா-எல பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

    October 12, 2026
    Editors Picks

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026

    இன்று பிற்பகலுக்குப் பின் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை!

    October 12, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

    October 13, 2026

    சாமிமலை கவரவில பாடசாலைக்கு அருகில் கோப்பி தொழிற்சாலை திட்டம்: மாணவர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து மக்கள் கடும் எதிர்ப்பு!

    October 13, 2026

    தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

    October 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.