மத்திய மாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலையங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்குத் தேவையான சந்தர்ப்பங்களில் விடுமுறை வழங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய மாகாண பிரதம செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேசத்தின் நிலவும் வானிலைச் சூழலைக் கருத்திற் கொண்டு, தத்தமது பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதா இல்லையா என்பது குறித்த இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
