நாட்டின் 4 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட எச்சரிக்கை (Level 2 – Amber):
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரள மற்றும் கங்கஇஹல கோரள
கேகாலை மாவட்டம்: யட்டியாந்தோட்டை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவ மற்றும் நோர்வுட் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் அவற்றைச் சூழவுள்ள பகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட (Level 2) மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முதலாம் கட்ட எச்சரிக்கை (Level 1 – Yellow):
கேகாலை மாவட்டம்: அரநாயக்க மற்றும் தெஹியோவிட்ட
நுவரெலியா மாவட்டம்: நுவரெலியா, தலவாக்கலை, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு
இரத்தினபுரி மாவட்டம்: நிவித்திகலை மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (Level 1) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, குறிப்பிடப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நிலவெடிப்பு, மரங்கள் சாய்தல் மற்றும் திடீர் நீர்வரத்து போன்ற மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படின் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
