சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நாளை மீண்டும் திறக்கப்படும் என மத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளில் தற்போது வானிலை சீரடைந்து வருவதால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் தொடர்வதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
