மத்திய மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகக் கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட திம்புளை கீழ்ப்பிரிவு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகளை இழந்து மற்றும் பாதுகாப்பற்ற நிலையில் வெளியேற்றப்பட்ட பொதுமக்கள், அப்பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களைக் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் ராஜமணி பிரசாந்த் நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்களது தற்போதைய அவசரத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்த அவர், அவர்களுக்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் வெள்ளத்தினால் சேதமடைந்த இடங்களையும் அவர் நேரில் சென்று பார்வையிட்டதுடன், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

