2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு, அனைத்து விதமான மேலதிக பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பட்டறைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடையும் வரை இத்தடை அமுலில் இருக்கும்.
இக்காலப்பகுதியில் மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல், அல்லது பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி துண்டுப் பிரசுரங்கள் அச்சிடுதல் மற்றும் ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்வதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09-ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறவுள்ளது.
இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களப் பிரதிநிதிகள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
