வெலகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பகோட்ட பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக மனைவைக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பகோட்ட பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மாவத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்த வெலகெதர பொலிஸார், குடும்பத் தகராறு காரணமாகவே கணவன் தனது மனைதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி இக்கொலையைப் புரிந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் கண்டறிந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 50 வயதுடைய கணவரிடம், வெலகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
