குவைத் மற்றும் கொழும்புக்கு இடையிலான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வானூர்தி சேவைகள் இன்று (8) பிற்பகல் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த சேவை மீண்டும் தொடங்குவது தொடர்பான தகவலை சிவில் வானூர்தி போக்குவரத்து அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய பதற்றமான சூழ்நிலை காரணமாக குறித்த சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
