Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

November 26, 2026

தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

November 26, 2026

கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

November 26, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்
Breaking

தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

ThanaBy ThanaNovember 26, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

ஆர்.எப்.எம். சுஹெல் – நுவரெலியா

 

ஒன்பது ஆண்டுகளாக நடத்தி வந்த சுயதொழிலுக்கு வேலி – வாழ்வாதாரத்தை இழந்த பெண்கள் தலவாக்கலையில் போராட்டம்!

 

விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை – கால்வாயின் இருபுற நிலங்களுக்கான உரிமை யாருக்கு? அதிகாரிகளிடம் விளக்கம் கோரும் மக்கள்

 

 

 

தலவாக்கலை நகரின் மத்தியில் அமைந்துள்ள கால்வாயை அண்மித்த பகுதியில் சுமார் ஒன்பது ஆண்டுகளாக சுயதொழிலில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்ளிட்ட குழுவினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இன்று (26) தலவாக்கலை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

குறித்த காணி மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்குச் சொந்தமானது எனத் தெரிவித்து, அதிகாரிகள் திடீரென அப்பகுதியைச் சுற்றி வேலி அமைத்தமையால், நீண்டகாலமாகத் தாம் முன்னெடுத்து வந்த சுயதொழில் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.

 

சுமார் ஒன்பது ஆண்டுகளாக எவ்வித இடையூறுகளுமின்றி குறித்த இடத்தில் தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்ததாகவும், எவ்வித முன் அறிவித்தலும் வழங்கப்படாமல் அல்லது மாற்று இடமொன்று ஒதுக்கிக் கொடுக்கப்படாமல் திடீரென வேலி அமைக்கப்பட்டதால் தாம் பெரும் அசௌகரியத்திற்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

 

தமது அன்றாட வருமானத்தை நம்பியே குடும்பங்களின் வாழ்க்கைச் செலவுகளை மேற்கொண்டு வந்த நிலையில், இந்த நடவடிக்கையால் வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது பிரச்சினைக்கு விரைவான தீர்வு வழங்கப்படாவிட்டால் விஷம் அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது எச்சரிக்கை விடுத்தனர்.

 

இதேவேளை, தலவாக்கலை நகரின் மத்தியில் ஓடும் கால்வாயின் இருபுறங்களிலும் அமைந்துள்ள காணிகளின் சட்டபூர்வ உரிமை தொடர்பாகவும் இச்சம்பவத்தின் மூலம் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

 

குறித்த காணிகள் மேல் கொத்மலை நீர்மின் திட்டத்திற்குச் சொந்தமானவையா, தலவாக்கலை – லிந்துலை நகர சபைக்குச் சொந்தமானவையா அல்லது வேறு ஏதேனும் அரச நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளவையா என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவான விளக்கமொன்றை பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 

நகரின் மத்தியில் அமைந்துள்ள கால்வாயின் இருபுறங்களிலும் உள்ள காணிகளின் உரிமை, கால்வாய் பாதுகாப்பு வலயத்தின் எல்லைகள் மற்றும் அப்பகுதிகளைப் பயன்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிகள் தொடர்பிலும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

அரச நிறுவனமொன்றுக்குச் சொந்தமான காணியாக இருந்தால், அதன் சட்டபூர்வ உரிமையை உறுதிப்படுத்துவதுடன், அதன் எல்லைகள் மற்றும் பயன்பாட்டு விதிமுறைகள் தொடர்பிலும் பொதுமக்களுக்கு வெளிப்படையான விளக்கமளிப்பது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும்.

 

அதேவேளை, பல ஆண்டுகளாக அந்த இடத்தைப் பயன்படுத்தி தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வந்த மக்களின் நிலைமையையும் மனிதாபிமான மற்றும் நியாயமான அணுகுமுறையுடன் பரிசீலிக்க வேண்டியது அவசியமாகும்.

 

எனவே, குறித்த காணிகளின் உரிமை தொடர்பான ஆவணங்கள், நில அளவைத் திட்டங்கள் மற்றும் கால்வாய் பாதுகாப்பு வலயத்தின் சரியான எல்லைகள் ஆகியவற்றை ஆராய்ந்து, இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை வழங்குவதற்கு மேல் கொத்மலை நீர்மின் திட்ட அதிகாரிகள், தலவாக்கலை – லிந்துலை நகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்கள் உடனடியாகத் தலையிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    வெறும் தேர்தல் வாக்குறுதிகளால் மலையக மக்களை ஏமாற்றிய அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி – அபிவிருத்தி ஊடாகப் பதிலளிக்கிறது தேசிய மக்கள் சக்தி – கிருஷ்ணன் கலைச்செல்வி*

    November 26, 2026
    Editors Picks

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026

    வரவு செலவுத்திட்டம் முடிந்த கையோடு பயப்படாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள்-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

    November 26, 2026

    தலவாக்கலையில் திடீர் வேலி அமைப்பால் வாழ்வாதாரம் பாதிப்பு – பெண்கள் போராட்டம்

    November 26, 2026

    தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கந்தகெட்டிய 19 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

    November 26, 2026

    கம்பளை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராகத் திரு. வடிவேல் முத்தையா கடமையேற்பு!

    November 26, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.