வீரகெட்டிய, அக்ரஹெர பகுதியில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வீரகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பன்றி ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட நிலையில், தவறுதலாக இந்த இளைஞரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
