ராஜகிரிய விகாரையில் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுத் தற்கொலை!
ராஜகிரியவில் அமைந்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விகாரையில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது சேவைத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடந்த சில நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
