கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்பு: பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டமை அம்பலம்!
கொழும்பு துறைமுகத்தில் உள்ள கொள்கலன் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, ‘ஐஸ்’ (ICE) எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCD) கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையின் போதே, குறித்த போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட வர்த்தகக் கொள்கலன் ஒன்றினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ప விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் சரியான எடை மற்றும் பெறுமதி என்பன மேலதிக பரிசோதனைகளின் பின்னரே உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் சர்வதேசக் கடத்தல் வலையமைப்பு தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
