பாடசாலை நிகழ்வுகளில் போதைப்பொருட்களுக்கு முற்றுப்புள்ளி பாடசாலை இலச்சினையைப் (Logo) பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருட்களை விளம்பரப்படுத்துவதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள 2026/10 இலக்கச் சுற்றறிக்கைக்கு அமைவாக, பாடசாலை இலச்சினை பயன்படுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளும் பாடசாலை விழாக்களாகவே கருதப்படும் என கல்வி அமைச்சின் இணைப்பாடவிதான வழிகாட்டல் கிளையின் பிரதிப் பணிப்பாளர் மகேஷ் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தச் சுற்றறிக்கையை மீறும் நிகழ்வுகளை உடனடியாகத் தடை செய்வதற்கான முழு அதிகாரம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
