இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்வுடன் ஜீவன் தொண்டமான் எம்.பி நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் வழிபாடு!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுடன், இ.தொ.கா பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், இன்று (10) நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற. விஷேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டிருந்தார்.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கிடையிலான நெருக்கமான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்த இந்த ஆன்மிக நிகழ்வில் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிப்பதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்திருந்தார்.
மேலும், இந்த நிகழ்வில் என்னையும் இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினரும் ஆலய நிர்வாக சபைத் தலைவருமான வேலுசாமி ராதாகிருஷ்ணன் அவர்களுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக்கொண்டார்.
ஊடகப்பிரிவு
ஜீவன் தொண்டமான்
