அரச இலக்கிய விழா 2026: விருது பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு பிரதி அமைச்சர் வாழ்த்து
ஜனாதிபதி தலைமையில் நேற்று முன்தினம் (08.09.2026) நடைபெற்ற அரச இலக்கிய விழா 2026 இல் தமிழ் மொழிப் பிரிவில் பல்துறைகளில் விருதுகளைப் பெற்ற பெற்ற மலையக எழுத்தாளர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்கான சிறந்த நானாவித படைப்பிற்கான விருதை வென்ற திரு. இரா. சடகோபன், தமிழ் மொழிக்கான நானாவித படைப்பிற்கான (ஆங்கிலம்) விருதை பெற்ற திரு. எம். வாமதேவன், தமிழ்ப்பிரிவில் சிறந்த நாவலுக்கான விருதை, பெற்ற இரா. நித்தியானந்தன், தமிழ்ப்பிரிவில் சிறந்த தமிழ் சிறுகதை தொகுப்பிற்கான விருதை பெற்ற திருமதி. பிரமிளா பிரதீபன் ஆகிய நால்வரும் தமக்கான விருதுகளைப் பெற்று மலையக இலக்கியத்துறையின் வளர்ச்சிக்கு பாரிய பங்கை ஆற்றியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்
எனவே இவர்களின் இலக்கிய பணி தொடரவேண்டும் என்பதுடன், மும்மொழிகளிலும் இலங்கையின் இலக்கிய வளத்தை வளப்படுத்திய இலங்கையின் இலக்கியத்திற்கான அதியுயர் விருதான “சாஹித்ய ரத்னா” விருதை பெற்றுக்கொண்ட மூத்த கவிஞர் சோ. பத்மநாதன் எழுத்தாளர் பராக்கிரம கொடித்துவக்கு பேராசிரியர் காமினி பொன்சேகா ஆகியோருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
