கண்டி மாவட்டம் மடுல்கலை கலாபொக்க ரெலுகஸ் இல.02 அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் புதிதாக நிர்மானித்து வரும் ஆலய திருமண மண்டப கட்டுமானப் பணிகளுக்காக மணல் ஏற்றிச் சென்ற கனரக டிப்பர் வாகனமானது, பிரதான பாதையிலிருந்து ஆலயத்திற்குச் செல்லும் பாதையில் பயணித்த போது அங்குள்ள பாலம் சேதமடைந்து டிப்பர் வாகனத்தின் பின்புறம் பள்ளத்திற்குள் இறங்கி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக சாரதிக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.
எனவே,பக்தர்களினதும் பாடசாலை மாணவர்களினதும் போக்குவரத்துச் சீராக அமையும் பொருட்டு, சேதமடைந்த இந்த பாலத்தை விரைவாகச் சீரமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ப.சிவராமகிருஷ்ணன்
