தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட பாலம் மீண்டும் சேதம் – நிரந்தர தீர்வு கோரி மக்கள்!
விக்டன் தோட்டப் பகுதிக்கான போக்குவரத்துக்கு முக்கியமான பாலம், கடந்த நாட்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மீண்டும் சேதமடைந்துள்ளது.
முன்னதாக போக்குவரத்து பாதிக்கப்படாத வகையில், வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள், அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டிருந்தது.
எனினும், தொடர்ச்சியான மழையால் பாலத்தின் அடிப்பகுதி மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் அன்றாட போக்குவரத்து மற்றும் வாகனப் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் இந்த வீதி மற்றும் பால பிரச்சினைக்கு தற்காலிக சீரமைப்புகள் மட்டுமன்றி, நிரந்தரமான பாலம் அமைத்து பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் பாதுகாப்பையும் அன்றாட வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, குறித்த பாலத்திற்கான நிரந்தர தீர்வை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக முன்னெடுக்க வேண்டும்.
விக்டன் தோட்டம் |அம்பகமுவ |பஸ்பாகே கோரளை
#விக்டன்_தோட்டம் #பாலம் #நிரந்தர_தீர்வு #மக்கள்_கோரிக்கை #அம்பகமுவ #Hatton #WigtonEstate
தகவல் – தினேஷ்
