மலையகத்தின் பெருமை தினேஷ் கனகராஜிற்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்!
கோலாகலமாக இடம்பெற்ற அரச ‘சரசவி’ திரைப்பட விருது விழாவில், சிறந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படத்துக்கான விருதினை மலையகம் பூண்டுலோயா கந்தசாமி தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இயக்குனர் தினேஷ் கனகராஜ் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த வெற்றி மலையக சமூகத்திற்கும், ஒட்டுமொத்த கலை உலகிற்கும் பெருமை சேர்க்கிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இவர், தற்போது முழுநேர சினிமா இயக்குனராக இலங்கையின் சவாலான திரைத்துறையில் காலடி பதித்து வெற்றிகளைக் குவித்து வருவது பாராட்டுக்குரியது.
இவர் இயக்கிய ‘அதிரன்’ திரைப்படம் பலரதும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. மலையகப் பின்னணியில் படமாக்கிய விதம், தொழில்நுட்ப நேர்த்தி, பின்னணி இசை உள்ளிட்ட பலம்சங்கள் ரசிகர்களைப் பிரமிக்க வைத்துள்ளன. மேலும், இப்படத்தின் நாயகன் சுதர்சன் சிறந்த நடிகருக்கான விருதினை வென்றமை குறிப்பிடத்தக்கது.
தற்போத்து சிங்கள மொழித் திரைப்படமாக இயக்கத் தயாராகி வரும் இயக்குனர் தினேஷ் கனகராஜ், இன்னும் சிங்களத் திரைப்பட இயக்கத்துக்காகவும் தேசிய அளவிலான விருதுகளை வென்று சாதனை படைக்க வேண்டும் என ‘மலையகம்.lk’ சார்பாக வாழ்த்துகிறோம்!
