கண்டி – நுவரெலியா பிரதான வீதியில் தவலந்தென்ன கெரண்டிஎல்ல பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக, பாரிய கற்பாறைகள் சரிந்து வீதியின் குறுக்கே விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
க. யோகா
இன்று இப்பகுதியில் பெய்த கடும் மழையினால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், கற்பாறைகளுடன் மண்சரிவும் பிரதான வீதிக்கு வந்துகிடைத்துள்ளது. இதனால் அப்பகுதிக்கான போக்குவரத்துச் செயற்பாடுகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதுடன், வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அனைவரும் மிகுந்த அவதானத்துடனும் பாதுகாப்பாகவும் வாகனங்களைச் செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸாரும், அனர்த்தப் பாதுகாப்புப் பிரிவினரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பாதையைச் சீரமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
