Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

September 21, 2026

ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

September 21, 2026

பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

September 21, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு
இலங்கை

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

ThanaBy ThanaSeptember 21, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் அரசாங்கத்தின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட 05 மெகாவொட் கொள்ளளவு கொண்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

10.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய மின் உற்பத்தி நிலையத்தின் ஊடாக ஆண்டுதோறும் சுமார் 7,500 வீடுகளின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யப்படும். இதன் மூலம் ஆண்டுதோறும் காபனீரொக்சைட் (CO2) வெளியேற்றத்தை சுமார் 6,440 மெட்ரிக் தொண்களினால் குறைத்துக் கொள்ள முடிவதுடன், ஆண்டுதோறும் டீசல் மூலம் மின் உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் 2.5 மில்லியன் லீற்றர் எரிபொருளும் மிச்சப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுதோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணி நாட்டுக்கு மீதப்படுத்தப்படுகிறது.

உள்ளூர் பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பவியலாளர்களின் முழுமையான பங்களிப்புடன் இத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு நிர்மாணப் பணிகளின் போது இப்பிரதேச மக்களில் சுமார் 150 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.

நினைவுப் பலகையைத் திறந்து வைத்து, தம்புள்ளை, இப்பன்கடுவ சூரிய மின் உற்பத்தி நிலையத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி, கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இத்திட்டத்தின் கீழ் பல சமூகநலத் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டதோடு, ஜனாதிபதி அடையாள ரீதியாக இந்நிகழ்விலும் கலந்துகொண்டார்.

இதற்கமைய, ஸ்ரீ விவேகாராம விகாரைக்கு ஜெனரேட்டர் ஒன்றும், தர்ம சாலையின் பணிகளுக்காக 800,000 ரூபா நிதி உதவியும், மீன்பிடிச் சமூகத்தினருக்குப் குளங்களை அமைத்துக் கொள்வதற்கும் மீன்பிடி உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கும் 2,000,000 ரூபா நிதி உதவியும், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் பசுமைப் பூங்கா ஒன்றை உருவாக்குவதற்காக 1,000,000 ரூபா நிதி உதவியும், ஆனகடாவ ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு வருடத்திற்குத் தேவையான பாடசாலை உபகரணங்கள் மற்றும் ஏனைய பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 800,000 ரூபா உதவியும், வீர மொஹான் ஜயமஹ வித்தியாலயத்திற்கு குடிநீர் திட்டம் ஒன்றை நிர்மாணிப்பதற்காக 400,000 ரூபா நிதி உதவி உள்ளிட்ட பல உதவிகள் இதன் போது வழங்கப்பட்டன.

துறைமுகங்கள், சிவில் விமானப் சேவைகள் மற்றும் வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் குமார ஜயகோடி மற்றும் அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள், வலுசக்தி அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அப்போன்ஸு , வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபையின் அதிகாரிகள், மின்சார சபை பதிலீட்டு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதான அதிகாரிகள், WindForce PLC முகாமைத்துவ பணிப்பாளர் மஞ்ஜுல பெரேரா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடக பிரிவு

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து 10 பேர் வைத்தியசாலையில்

    September 21, 2026

    கண்டி ,நுவரெலியா உட்பட நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்

    September 21, 2026
    Editors Picks

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026

    நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை

    September 21, 2026

    தம்புள்ளை, இப்பன்கடுவ வாவியில் நிர்மாணிக்கப்பட்ட “திய ஜனனி” மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைப்பு

    September 21, 2026

    ஜனாதிபதி நிதியத்தின் மூலம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்

    September 21, 2026

    பொகவந்தலாவை வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

    September 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.