Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

November 23, 2026

கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

November 23, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

November 23, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்
இலங்கை

தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

ThanaBy ThanaNovember 23, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

 

இலங்கையின் தேச நலன்களைப் பாதுகாக்கும், பொருளாதார இராஜதந்திரத்தைப் பலப்படுத்தும், நாட்டின் மூலோபாய புவியியல் அமைவிடத்தைத் திறம்படப் பயன்படுத்தும் ஒருங்கிணைந்த, முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

 

2027 வரவு செலவுத் திட்டத்தின் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் குழுநிலை விவாதத்தில் இன்று (23) பங்கேற்று உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

 

வெளிநாட்டுக் கொள்கையின் வெற்றியை மதிப்பிடுவதற்கான 12 முக்கிய தூண்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த உரையில் முன்வைத்தார். தேசிய பாதுகாப்பு, பொருளாதார அபிவிருத்தி, சர்வதேச ஒத்துழைப்பு, மனித உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் நலன் பேணல் என்பன இவற்றில் அடங்கி காணப்படுகின்றன.

 

இலங்கையின் சர்வதேச ஸ்தானத்தையும், மூலோபாய அனுகூலங்களையும் அரசாங்கம் போதுமான அளவில் பயன்படுத்தியுள்ளதா என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார். குறிப்பாக, வர்த்தகத்தை ஊக்குவித்தல், கடல்சார் வளங்களை அபிவிருத்தி செய்தல், சார்க் (SAARC), பிம்ஸ்டெக் (BIMSTEC) மற்றும் இந்து சமுத்திர வலய ஒத்துழைப்புச் சங்கம் (Indian Ocean Rim Association) ஆகியவற்றின் ஊடாகப் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் கூடிய மட்ட நன்மைகளை ஈட்டிக்கொண்டுள்ளதா என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

 

பலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அமைதியான இரு-நாட்டுத் தீர்வுக்கு ஆதரவளிப்பதையும், காலநிலை மாற்றம் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பாக அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் என்று வலியுறுத்திய எதிர்க்கட்சித் தலைவர், செயலற்ற அணிசேரா அணுகுமுறையை நிராகரித்து, உலகெங்குமுள்ள நாடுகளுடன் சாதகமான பங்காண்மைகளை உருவாக்கி, அத்தகைய உறவுகள் ஊடாக இலங்கைக்கு நேரடியாகப் பயனைப் பெற்று, பொருளாதார மீட்சிக்குப் பங்களிப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை நிலைப்பாடாக காணப்படுகின்றது என்று சுட்டிக்காட்டினார்.

 

சரியான கொள்கை வகுப்பையும், பயனுள்ள அமுலாக்கத்தையும் உறுதிசெய்வதற்கு, புதிய நிறுவன கட்டமைப்புகள் மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (think tanks) மூலம் வெளிநாட்டுக் கொள்கை தீர்மானம் எடுக்கும் செயல்முறையை நவீனமயப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தனது யோசனையை முன்வைத்தார்.

 

அரசியல் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல், இலங்கையினதும் அதன் 22 மில்லியன் மக்களினதும் நலன்களுக்குப் பயனளிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் எதிர்க்கட்சி ஆக்கபூர்வமாக ஆதரவளிக்கும் என பிரேமதாச தனதுரையில் உறுதியளித்தார்.

 

மேலும், முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற நடவடிக்கைகள், பரந்த அளவிலான பங்குதாரர்களுடன் கலந்தாய்வு செய்யப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் அழைப்பை மதிப்பதை உறுதிசெய்ய வேண்டும் என பிரதி சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    மஞ்சள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நீல வர்ணம் பூசி மோசடி: கையும் களவுமாக சிக்கிய மூவர்!

    November 22, 2026
    Editors Picks

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026

    போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்க மீனவ மக்களின் ஒத்துழைப்பு அவசியம்

    November 22, 2026

    தேச நலன்களை மையமாகக் கொண்ட முனைப்பு மிக்க வெளிநாட்டுக் கொள்கையொன்று இலங்கைக்கு அவசியம்

    November 23, 2026

    கொழும்பு – கண்டி பிரதான வீதி கீழ் கடுகன்னாவ பகுதியில் இன்று இரவு 7 மணித்தியாலங்களுக்கு மூடப்படும்

    November 23, 2026

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் தாய்லாந்து பிரதிப் பிரதமர் சந்திப்பு:

    November 23, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.