நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய மலசலகூடத் தொகுதி மக்கள் பயன்பாட்டிற்காக கையளிப்பு
கிராம அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், நுவரெலியா மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம அபிவிருத்திச் சங்கங்களையும் ஒன்றிணைத்து, கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் “கெமி சக்தி” (Gami Shakthi) வேலைத்திட்டத்திற்கு இணையாக, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே அமைந்திருந்த மலசலகூடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.
கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பங்களிப்புடன் செலவினங்களை ஏற்று, குறித்த மலசலகூடத் தொகுதிக்கு புதிய செப்டிக் தொட்டி மற்றும் கழிவுநீர் குழாய் கட்டமைப்பு அமைக்கப்பட்டதுடன், மலசலகூடத் தொகுதியும் முழுமையாக புனரமைக்கப்பட்டது.
புனரமைக்கப்பட்ட மலசலகூடத் தொகுதி இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கஜரூபன் திவ்யா நுவரெலியா
