Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

September 24, 2026

குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

September 24, 2026

நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இலகுபடுத்த விசேட குழு கூட்டம்
இலங்கை

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இலகுபடுத்த விசேட குழு கூட்டம்

ThanaBy ThanaSeptember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடைமுறையை மேலும் இலகுபடுத்தி, முறைமைப்படுத்துவது தொடர்பான விசேட குழுவின் முதற்சந்திப்பு, அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவே இவ்வாறு கூடியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சுகத் வசந்த டி சில்வா, தினேஷ் ஹேமந்த மற்றும் சதுரி கங்கானி ஆகியோரின் பங்கேற்புடன் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சாரதி அனுமதிப்பத்திரங்களைப் பெறும்போது எதிர்நோக்கும் நடைமுறை மற்றும் சட்டச் சிக்கல்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன், அவர்களின் குறைபாடுகளுக்கு ஏற்ப வாகனங்களை மாற்றியமைத்துப் பயன்படுத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்தும் கவனஞ்செலுத்தப்பட்டது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைகளை மாவட்ட மட்டத்தில் விரிவுபடுத்துதல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கான மருத்துவ அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு அனுமதி அளிக்கப்படும் வாகன வகைகளை அதிகரித்தல் மற்றும் வாகனங்களில் உரிய பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்துதல் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மேலும், செவிப்புலன் குறைபாடுடைய நபர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் உள்ள சட்டப்பூர்வ நிலைமைகள், விசேட அடையாளக் குறியீடுகளின் பயன்பாடு மற்றும் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வது குறித்தும் பேசப்பட்டது.

ஒருவருக்கு பல வாகனங்களுக்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், மருத்துவப் பரிசோதனை முறையை எளிமையாக்குதல், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்திற்கும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கும் இடையிலான இணையவழி அமைப்பை மேம்படுத்துதல் ஆகிய யோசனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அதேவேளை, மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமைகளைப் பாதுகாப்பதே இதன் முக்கிய நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் அமைச்சு மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!

    September 24, 2026

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026
    Editors Picks

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026

    மலையகத்தில் தொடரும் சீரற்ற காலநிலை -நுவரெலியா வலயப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

    September 24, 2026

    இரத்தினபுரியில் வீசிய பலத்த காற்று: அரச மரம் விழுந்து லயன் குடியிருப்பு முற்றாகச் சேதம்; பெண் வைத்தியசாலையில் !

    September 24, 2026

    குயில்வத்தை பகுதியில் மண்சரிவு: ஹட்டன்–கொழும்பு வீதியில் போக்குவரத்து பாதிப்பு!

    September 24, 2026

    நோர்வுட் செல்லும் வீதியில் சுவர் இடிந்து விழுந்ததால் வீதி தடைபட்டுள்ளது 

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.