Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

September 24, 2026

ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

September 24, 2026

​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

September 24, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்
இலங்கை

ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

ThanaBy ThanaSeptember 24, 2026No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

குருநாகல் ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

பாரம்பரிய அடையாளத்தையும் சூழலையும் பாதுகாத்து குறுகிய காலத்தில் திட்டங்களை தயாரிக்க நடவடிக்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க குருநாகல் ரிதீ விகாரையை, அதன் பாரம்பரிய அடையாளம் மற்றும் இயற்கைச் சூழலைப் பாதுகாத்து சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்வது தொடர்பான முதற்கட்டக் கலந்துரையாடல் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் இக்கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

வடமேல் மாகாணத்தின் குருநாகல் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் முக்கிய காரணியாக விளங்கும் ரிதீ விகாரையை மையமாகக் கொண்டு, முறையான அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

இதற்கமைவாக, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்து, குறுகிய காலத்திற்குள் முறையான அபிவிருத்தித் திட்டங்களைத் தயாரித்து, எதிர்கால அபிவிருத்திப் பணிகளை விரைவில் ஆரம்பிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ரிதீ விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே புத்தரக்கித நாயக்க தேரர், வணக்கத்திற்குரிய ரிதீகம வனரதன தேரர் ஆகிய மகாசங்கத்தினருடன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.எம். அஸ்லம், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சுரஞ்சித் வேவிட்ட, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுலாப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல்) எச்.பி. சோமதிலக, இலங்கை உள்ளூர் சுற்றுலா அமைப்பாளர்கள் சங்கத்தின் (SLAITO) பிரதித் தலைவர் நிலான் விக்ரமசிங்க, ரிதீ விகாரை இளைஞர் பௌத்த சங்கத்தின் தலைவர் உபாலி அனுர பல்லெமுல்ல, பேராசிரியர்களான டப்ளியூ.கே.சி. ஞானபால மற்றும் மொஹம்மத் ஹலீம் மொஹம்மத் அஸ்லம், ரிதீகம பிரதேச செயலாளர் குஷான் தனஞ்சய விக்ரமசூரிய, வடமேல் மாகாண சுற்றுலா அதிகாரசபையின் பணிப்பாளர் ஏ. நாலக சிசிர குமார உள்ளிட்ட அரச அதிகாரிகளும் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

    September 24, 2026

    இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

    September 24, 2026

    மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இலகுபடுத்த விசேட குழு கூட்டம்

    September 24, 2026
    Editors Picks

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026

    ​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

    September 24, 2026

    இலங்கை – இந்தோனேசியா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது அரசியல் கலந்தாய்வு கொழும்பில் நிறைவு: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம் ஆரம்பம்!

    September 24, 2026

    சீற்றமடையும் வானிலை: 13 மாவட்டங்களில் 2,400 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; இருவர் பலி

    September 24, 2026

    ரிதீ விகாரையை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய தீர்மானம்

    September 24, 2026

    ​‘சுபக’, ‘சுஜாத தியணி’ புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் இரட்டிப்பு: ஜனாதிபதி நிதியத்தினூடாக வழங்க தீர்மானம்!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.