Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

September 28, 2026

வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

September 28, 2026

சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

September 28, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்களை சென்றடைய வேண்டும்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!
இலங்கை

சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்களை சென்றடைய வேண்டும்: பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!

ThanaBy ThanaSeptember 28, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சுற்றுச்சூழலுக்கும் கலாசாரத்திற்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகங்களை வலுவூட்டும் சூழல்-நட்பு சுற்றுலா அணுகுமுறையை ஊக்குவித்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற “நிலையான கலாசாரத்துடன் இணைந்த சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்திற்கான தேசிய மாநாடு” நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேல் மாகாண சுற்றுலா சபையும், களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவனமும் இணைந்து இந்த தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

“சுற்றுலாத் துறையை மீள்வடிவமைப்பதற்கான டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலும் செயற்கை நுண்ணறிவும்”என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்பட்ட டிஜிட்டல் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மற்றும் சுற்றுலாச் சங்க மாணவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் பிரதமர் இதன்போது வழங்கிவைத்தார்.

மேலும், கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ‘அலவல’ சமூக அடிப்படையிலான நிலையான சுற்றுலா கிராமத்திற்காக, மேல் மாகாண சுற்றுலா சபையும் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனமும் (SLT) இணைந்து உருவாக்கிய ‘Smart Tourism Platform’ புதிய தொழில்நுட்பக் கட்டமைப்பும் பிரதமரினால் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைக்கப்பட்டது.

நிகழ்வில் தொடர்ந்துரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய:“இலங்கை என்பது பல நூற்றாண்டுகளாக மனித படைப்பாற்றல், பாரம்பரியஅறிவு மற்றும் கலாசாரப் பன்மைத்துவத்தால் வளம் பெற்ற தனித்துவமான வரலாற்றைக் கொண்ட நாடாகும். இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாட்டின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு அதனைப் பங்களிக்கச் செய்வது நம் அனைவரினதும் தேசியப் பொறுப்பாகும்.

எமது ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் முதன்மை நோக்கம், அனைத்துத் துறைகளையும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உண்மையான மறுசீரமைப்புகளால் வலுப்படுத்துவதாகும். 2024ஆம் ஆண்டில் 2.05 மில்லியன் (20 இலட்சத்திற்கும் அதிகமான) சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததுடன், 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டது. 2025ஆம் ஆண்டில் இவ்வருகை 2,362,521 ஆக உயர்வடைந்து, 3.22 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருமானம் கிடைத்துள்ளது.

இந்த வளர்ச்சியை மேலும் விரிவுபடுத்தி, 2030ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதுடன், 8 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாயை ஈட்டுவதே அரசாங்கத்தின் இலக்காகும்” எனத் தெரிவித்தார்.

குறிக்கோள் இலக்குகளை எட்டுவதற்குப் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் அறிவை நடைமுறை சுற்றுலாத் துறைக்கு நேரடியாகப் பயன்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அரச-தனியார் துறைகள் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு அமைப்புகள் இணைந்து புத்தாக்கத் தீர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதிய கல்வி மறுசீரமைப்புகள் மூலமாக சுற்றுலாத் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இளைஞர்களும் பாடசாலை மாணவர்களும் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் கலாசார அறிவினால் பலப்படுத்தப்பட வேண்டும் எனக் கூறினார். அத்துடன், சுற்றுலாத் துறையை எதிர்காலத்திற்குரிய ஒரு சிறந்த தொழில் வாய்ப்புத் துறையாகக் கருதுமாறு மாணவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிகழ்வில் கொழும்பு மாவட்ட சுற்றுலா உபகுழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர, களுத்துறை மாவட்ட சுற்றுலா உபகுழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி, மேல் மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.டீ. சதீகா, மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவர் கலாநிதி மஹேஷ் பிரியதர்ஷன உள்ளிட்ட அதிகாரிகள், கல்விமான்கள், அரச-தனியார் துறை பிரதிநிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    நுவரெலியா உட்பட பல மாவட்டங்களில் மழைக்கு சாத்தியம்: மின்னல் தாக்கம் குறித்து அவதானம் தேவை!

    September 28, 2026
    Editors Picks

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026

    மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்

    September 28, 2026

    கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரத்னவுக்கு பிடியாணை: நீதிமன்றம் உத்தரவு!

    September 28, 2026

    வீடுகளை வாடகைக்கு விடும் முன் எச்சரிக்கை: உரிமையாளர்களுக்கும் பொலிஸார் கெடு!i

    September 28, 2026

    சச்சினின் சாதனையைத் தகர்த்தார் விராட் கோலி: ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 15,000 ஓட்டங்களைக் கடந்து புதிய உலக சாதனை!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.