ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியின் பொகவந்தலாவ தோட்டப் பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர்.
ஹட்டனிலிருந்து பொகவந்தலாவ நோக்கி அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும், பின்னசனத்தில் பயணித்த பெண்ணொருவரும் பலத்த காயமடைந்து பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதிக வேகம் காரணமாகவே சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுவதுடன், விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
