பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த மொரட்டுவை மாவட்ட நீதிபதியும், முன்னாள் பிரதம நீதவானுமான திலின கமகேயை பதவியிலிருந்து முழுமையாக நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டி ஒன்றை வைத்திருந்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.
இது தொடர்பான விசாரணைகளின் முடிவில், அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இறுதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைகள் காரணமாக அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
