நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது நேற்று (12) மாலை 4:00 மணி முதல் இன்று (13) மாலை 4:00 மணி வரை, 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும் என அந்த நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இரண்டாம் நிலை அபாய எச்சரிக்கை (Level 2 – Alert):
கேகாலை மாவட்டம்: மாவனெல்ல, ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய ஆகிய பகுதிகள்.
முதலாம் நிலை அபாய எச்சரிக்கை (Level 1 – Watch):
பதுளை மாவட்டம்: எல்ல, பசறை
கொழும்பு மாவட்டம்: பாதுக்க
கண்டி மாவட்டம்: ஹதரலியத்த, தும்பனை
கேகாலை மாவட்டம்: தெஹியோவிட்ட, கேகாலை, ரம்புக்கனை, யட்டியாந்தோட்டை, அரநாயக்க, வரக்காப்பொல
மாத்தளை மாவட்டம்: அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை, மாத்தளை
நுவரெலியா மாவட்டம்: ஹங்குரன்கெத்த
இரத்தினபுரி மாவட்டம்: குருவிட்ட, அயகம, எஹெலியகொட, வெலிகேபொல, இரத்தினபுரி, களவானை, இம்புல்பே, நிவித்திகலை
குறித்த பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை பெய்துவரும் நிலையில், மக்கள் அவதானமாக இருக்குமாறும், மண்சரிவு அபாய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகள் அறிவுறுத்தியுள்ளன.
