அரசாங்கத்தால் வழங்கப்படும் அஸ்வெசும நலத்திட்ட உதவிகளின் கீழ், தகுதியான பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 2.04 பில்லியன் வரவு வைக்கப்படவுள்ளது.
இதன்படி, தொடர்புடைய பயனாளிகளின் அஸ்வெசும வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ. 2,041,711,250 மாற்றப்படவுள்ளதுடன், பயனாளிகள் தங்களின் தொகையை பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கிடையில், முதலாம் கட்டத்தின் கீழ் 985,283 பயனாளி குடும்பங்களுக்கு அக்டோபர் 2026 மாதத்திற்கான அஸ்வெசும நலன்புரி நன்மைத் திட்டத்திற்காக ரூ. 9,123,802,500 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயனாளிகள் தங்களுக்குரிய கொடுப்பனவுகளைத் தங்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
