சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவகாரத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய சவூதி அரேபிய அரசாங்கத்திற்கு இலங்கை அரசு தனது நன்றியைத் தெரிவித்துள்ளது.
மேலும், இதற்காக பாடுபட்ட சவூதிக்கான இலங்கைத் தூதுவர், வெளிவிவகார அமைச்சின் செயலாளர், அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அத்துடன் இரு நாடுகளையும் சேர்ந்த சட்டக் குழுவினருக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளது.
