சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்ட 7 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதியை, அப்பணியகத்தின் பணிகளுக்குப் பயன்படுத்தாமல், ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக டி-ஷர்ட்டுகளைக் கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நஷ்டம் விளைவித்ததாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.
இதனைக் பரிசீலித்த நீதவான், பசில் ராஜபக்சவைக் கைது செய்து ஆஜர்படுத்துவதுடன், சர்வதேச பொலிஸார் ஊடாகச் சிவப்பு அறிவித்தலைப் பெறத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
