Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

October 15, 2026

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

October 15, 2026

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

October 15, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  
Breaking

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

ThanaBy ThanaOctober 15, 2026No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை

நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும்

-கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் தெரிவிப்பு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கொட்டகலை பிரதேச உறுப்பினர்களுக்கு தலா இரண்டு இலட்ச ரூபா வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிதியை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆந் திகதிக்கு முன்னர் அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிட்டு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் ஒதுக்கப்பட்ட நிதி திரும்பிச் செல்வதற்கான வாய்ப்பு உண்டு என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும் என கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் நேற்று (13) நடைபெற்ற மாதாந்த அமர்வில் பேசும்போது தெரிவித்தார்.அவர் மேலும் பேசுகையில்,

2026 இல் எமது சபைக்குக் கிடைத்த வருமானத்தின் அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரின் அபிவிருத்தித் திட்டத்துக்கும் இரண்டு இலட்ச ரூபா வீதம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டியது எமது பொறுப்பாகும். எனவே, அடுத்த மாதத்துக்குள் செலவிட்டு நிதி திரும்பிச் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு எமது பிரதேச சபைக்கு உட்பட்ட, வாகனங்களை நிறுத்த வசதியான கொமர்ஷல் “வாவி” பகுதியில் தற்காலிகக் கடைகளை அமைத்து வாடகைக்கு விடுவதன் ஊடாக சபைக்கு மேலதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு கிட்டியுள்ளது. அடுத்த ஆண்டில் வரி வீதமும் அதிகரிக்கவுள்ளது. எனவே, 2027 வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 4 இலட்ச ரூபா வீதம் நிதியை ஒதுக்கித் தர தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதேச அபிவிருத்திக்கு உறுப்பினர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கொட்டகலை மற்றும் லிந்துலை மாவட்ட வைத்தியசாலைகளில் நோயாளர்கள் தகுந்த முறையில் கவனிக்கப்படுவதில்லை எனவும், அங்கு பணி புரிவோர் நோயாளர்களிடம் தரக் குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பதாகவும் உறுப்பினர்கள் புஷ்பா விஸ்வநாதன், எஸ். பத்மநாதன், எஸ். இராஜேந்திரன், திருமதி நேசமலர், ரசிக்கா ஆகியோர் முறைப்பாடு தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக பலரின் கவனத்துக்குக் கொண்டு வந்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. எனவே, மத்திய மாகாண ஆளுநரின் கவனத்துக்கு எழுத்து மூலம் கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எமது பிரதேச சபை உறுப்பினர்கள் மிகவும் ஒற்றுமையாக இருந்து தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். அதேபோல், உறுப்பினர்களின் கௌரவத்தையும், கண்ணியத்தையும் காப்பற்றி சமுகத்துக்கு எதிராக செயற்படுவோர் மீது தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் மலையக மக்களை “கள்ளத்தோணி” என்று கூறிய தோட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இத்தகைய ஒற்றுமை பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலும் இருக்க வேண்டும் என்பதை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளமை வரவேற்கத் தக்கது. எமது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் போதும், இழிவு படுத்ப்பும் போதும் நாம் துணிந்து குரல் எழுப்புவோம்.

அத்தோடு, எமது சபைக்கு 102 மில்லியான் ரூபா நிதியை ஒதுக்கிக் கொடுத்துள்ள அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    கனடா, டொரோண்டோ உலகத் தமிழ் ஆய்வு மாநாடு – 2026 இல் ஆய்வாளர், அருணாசலம் லெட்சுமணன் அவர்களது ஆய்வுரை இடம்பெறவுள்ளது.

    October 14, 2026

    இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

    October 14, 2026
    Editors Picks

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

    October 15, 2026

    நோர்வுட் பிரதேச செயலக அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் – CID விசாரணை தீவிரம்!

    October 15, 2026

    வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

    October 15, 2026

    பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை நவம்பர் 15 க்கு முன்னர் அபிவிருத்திக்கு செலவிட வேண்டும் -கொட்டகலை பிரதேச சபை தலைவர்  

    October 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.