ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுத்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிஉயர் பாதுகாப்பு வலயமான ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகப் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு எவருக்கும் அனுமதியளிக்கக் கூடாது என காவல்துறையினர் விடுத்த கோரிக்கையை ஏற்றே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
