கிரிஷ் நிறுவன நிதி முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதன்போது, வழக்கில் சந்தேகநபர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபரான நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்குவது குறித்த உத்தரவை எதிர்வரும் 23ஆம் திகதி அறிவிப்பதாகத் தெரிவித்த நீதவான், ஜானகி சிறிவர்தன தரப்பில் விசேட காரணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாததால் அவரது பிணை மனுவையும் நிராகரித்தார்.
