கண்டி – அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இன்று இப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை ஏற்றிச் சென்ற பாரிய வாகனம் ஒன்று திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம், வீதியில் சென்றுகொண்டிருந்த பல வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் மீது வேகமாக மோதியுள்ளது.
இந்த அதிபயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே நால்வர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயமடைந்து அருகில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்கான காரணம் மற்றும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்குறணைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
