பொரளை – டீ.எஸ். சேனநாயக்க வீதியில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகக் குழாய் கசிவு காரணமாக, கொழும்புக்குள் நுழையும் வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால், மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி வரும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகப் பழைய புலர்ஸ் வீதி மற்றும் கோட்டா வீதி ஊடான மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்குப் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
